top of page
John Britto
Parisutham
Search


கணேஷின் கதை
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்’னு அம்மாவும் அப்பாவும் இப்படி மூலையில ஒக்காந்துட்டு அழுவுறாங்க? டின்னர் டைம் இது....பசிக்குது. சாப்பாடு போடாம...சோபாவுல ஒக்காந்துட்டு அழறதுக்கு நான் சொன்னது தான் காரணமா? அட போங்க! இந்த Gen X, Gen Y பெரியவங்களயே புரிஞ்சிக்கமுடியலீங்க! அப்படி என்ன சொல்லிட்டேன்’னு தான முழிக்கிறீங்க. இன்னக்கி காலையிலேர்ந்து எங்க வீட்டுல என்ன நடந்தது’ன்னு சொன்னாதான் ஒங்களுக்குப் புரியும். மேல படிங்க. ****** Let me introduce myself…என் பேரு கணேஷ்…I’m in Year 7. அப்போ

உயிர்மெய்யார்
Jan 45 min read


செருப்பு - சிறுகதை - உயிர்மெய்யார் - 08.11.2025
“எங்கப் போட்டீங்க மச்சான்?” “அதோ!…அங்கப் போட்டேன்…மாப்ள” “ரெண்டையும் ஒண்ணாவா?...” “ஆமா!…ரெண்டையும் ஒண்ணாத்தான் போட்டன்….அப்படித்தான போடனும்?…” “அய்யய்யே!…அப்படிப் போடக்கூடாது மச்சான்….” “அப்பறம்?...” “இங்க ஒன்னு போடனும்….அப்பறம் ரொம்ப தூரம் தள்ளி…அதோ... அங்க இன்னொன்ன போடனும்…” “அப்படியா?...எதுக்கு மாப்ள?” “அப்பத்தான் காணாப்போகாது…ஒத்தச் செருப்பை வச்சிகிட்டு திருடன் என்னா பண்ணுவான்…..” என்று சொல்லிவிட்டு ‘கப கப’ன்னு சிரித்தான் பரதன். பரதனின் மனைவி வேணி, “இப்படித்தான் அண்ணா!…

உயிர்மெய்யார்
Nov 8, 20255 min read


பஞ்சவர்ணக்கிளி - சிறுகதை - உயிர்மெய்யார் - 04.11.2025
சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இன்னும் ஓரிரு வருடங்களில் எழுபதைத் தொட இருக்கும் வயது. கைலியும் பனியனும் போட்டிருந்தார். நாலைந்து நாள் தாடி அவர் முகத்திற்கு கொஞ்சம் வசீகரத்தைத் தான் கூட்டியிருந்தது. மனைவி சந்திரா கொடுத்த காபியை உறிஞ்சியவாறே மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு முன்பக்கம் இருந்த காலி இடத்தில் உட்கார்ந்திருந்ததால் காற்று நன்கு அடித்துக் கொண்டிருந்தது. ‘படார்…’ முன் கேட்டிலிருந்து தான் அந்த சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தார். ஒரு

உயிர்மெய்யார்
Nov 4, 20256 min read


பணிவிடை - சிறுகதை - உயிர்மெய்யார் - 26.10.2025
ப ழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குப் போகும் பேருந்தில் ஏறினாள் மதுமதி. துணிமணிகள் வைத்திருக்கிற ஜிப் போட்ட பேக்கை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, சிறிய கைப்பையை இன்னொரு கையின் தோளில் மாட்டிக் கொண்டு ஏறுவது சற்றே கஷ்டமாக இருந்தாலும் ஏறிவிட்டாள். பேருந்தின் பின் சீட்டில் தான் இடம் கிடைத்தது. அவளுக்குப் பக்கத்தில் சற்றே வயதான அம்மா, தன் எதிரே பனியன் துணிகளை வைத்து இறுக்கிக் கட்டியிருந்த மூட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மதுமதிக்கு இடம் கொடுத

உயிர்மெய்யார்
Oct 27, 202510 min read


டெய்லர்
காலால் தடக் தடக்’கென்று மிதித்துக் கொண்டிருந்த தையல் மிஷின்கள் இரண்டை, போன வருடம் தான் விற்று விட்டு, மேற்கொண்டு கடன் வாங்கி, கரண்ட்டில் ஓடும் மிஷினை வாங்கியிருந்தார் அவர். அவசரம் அவசரமாக ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார். மெஷின் ஓடும் மெல்லிய ஒலி கேட்டது. இருக்கிற ஒரே டியூப் லைட்டின் ஒலியில் குனிந்து தைத்துக் கொண்டிருந்தார். எதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் சற்றே கோபமாக உட்கார்ந்திருந்தார். அவரது பார்வை டெய்லர் மேலேயே இருந்தது. அவரைச் சட்டை செய்யாமல் டைலர் சட்டையைத்

உயிர்மெய்யார்
Oct 15, 202512 min read


செவப்புச் சேல
ச த சதவென்று இருந்த சகதியில் இறங்கினாள் அஞ்சலை. தாவணியையும் பாவாடையையும் எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள். அவளது அப்பாவின் மேல்சட்டையைப் போட்டிருந்தாள். தலையில் ஒரு துண்டை இப்படியும் அப்படியுமாகச் சுத்திக் கட்டியிருந்தாள். இடது கையில் நெல் நாத்து கத்தையொன்றை லாவகமாகப் பிடித்து, வலது கையால் சிலதை எடுத்து சேற்றில் இறக்கினாள். அஞ்சலையோடு சேர்த்து, பத்துப் பதினைந்து பேர் வரிசையாக குனிந்து நாத்து நட்டுக்கொண்டிருந்தார்கள். காலைச் சூரியனின் கதகதப்பு இன்னும் முழுமையாக வரவில்லை. ம

உயிர்மெய்யார்
Sep 26, 202511 min read


அரிசி - சிறுகதை - உயிர்மெய்யார் - 20.09.2025
திங்கட் கிழமை வருகிற வெள்ளிக்கிழமை நல்ல நாள். அன்றே அதைச் செய்துவிடுவது என்று தணிகாசலம் முடிவு செய்துவிட்டார். இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கின்றன. அதற்குள் எல்லாவற்றையும் செய்து விட முடியுமா? என்று யோசித்தார். முடியுமா என்ன? முடிக்கவேண்டும். அப்படி ஒரு நிறைந்த நல்ல நாள் மறுபடி கிடைப்பது கஷ்டம். அதற்குள் சென்டரில் போட்ட குறுவை நெல்லுக்கானப் பணம் அவரது வங்கிக்கணக்கில் வந்து விடும். அந்த வட்டாரத்திலேயே இல்லாத உம்பளாச்சேரி நாட்டு மாடு ஒன்று அவரிடம் இருக்கிறது. “மாட்ட கட்ட

உயிர்மெய்யார்
Sep 21, 202511 min read


வளையல் - உயிர்மெய்யார் - 18.09.2025
அவள் அம்மா, அவளுடைய கண்ணுக்கு மை தீட்டும் அழகே அழகு. இரண்டு டம்ளர்களை பக்கம் பக்கமாக வைப்பாள். அவை நடுவே ஒன்றோ இரண்டோ அகல் விளக்குகளில் எண்ணெயை ஊற்றி, திரியைப் பற்ற வைப்பாள். சில நேரம் அதில் பாதாம் பருப்பு போன்ற ஏதாவது பருப்புகளைப் போடுவாள். அது அதிகாலை கீழ்வான நிறத்தில் எரியத் துவங்கும். டம்ளர்கள் மேல் ஒரு எவர்சில்வர் தட்டை வைப்பாள். கொஞ்ச நேரத்தில் தட்டில் கணிசமான அளவு புகைக்கரிப் படியும். அதை ஒரு கொட்டாங்கச்சியில் சேகரிப்பாள். பாட்டிலிலிருந்து கொஞ்சம் விளக்கெண்ணெய் அல்லது

உயிர்மெய்யார்
Sep 18, 202510 min read
bottom of page