top of page
John Britto
Parisutham
Art & Literature


யாரது?
உயிர்மெய்யார் 10.11.2025 மூச்சிறைக்க ஓடிவந்தான் ஏழெட்டு வயதுள்ள சிறுவன். தெருவில், ஆண் நாய்கள் சில ஒரு பெண் நாயைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. ஓர் ஆட்டோவில் சிவப்புக் கொடியைக் கட்டிக் கொண்டு சிலர் கோஷம் போட்டபடிச் சென்று கொண்டிருந்தனர். வானில் பறவைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கிட்டிப்புல் விளையாடிக்கொண்டிருந்த பையன்களிடம், “டேய்! பொணம்டா…பொணம்…இருபது கண்ணு பாலத்துல தேங்கி நிக்குது ஒரு பொணம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு ஓடினான் அச்சிறுவன். விளையாட

உயிர்மெய்யார்
4 min read


செருப்பு - சிறுகதை - உயிர்மெய்யார் - 08.11.2025
“எங்கப் போட்டீங்க மச்சான்?” “அதோ!…அங்கப் போட்டேன்…மாப்ள” “ரெண்டையும் ஒண்ணாவா?...” “ஆமா!…ரெண்டையும் ஒண்ணாத்தான் போட்டன்….அப்படித்தான போடனும்?…” “அய்யய்யே!…அப்படிப் போடக்கூடாது மச்சான்….” “அப்பறம்?...” “இங்க ஒன்னு போடனும்….அப்பறம் ரொம்ப தூரம் தள்ளி…அதோ... அங்க இன்னொன்ன போடனும்…” “அப்படியா?...எதுக்கு மாப்ள?” “அப்பத்தான் காணாப்போகாது…ஒத்தச் செருப்பை வச்சிகிட்டு திருடன் என்னா பண்ணுவான்…..” என்று சொல்லிவிட்டு ‘கப கப’ன்னு சிரித்தான் பரதன். பரதனின் மனைவி வேணி, “இப்படித்தான் அண்ணா!…

உயிர்மெய்யார்
5 min read


பஞ்சவர்ணக்கிளி - சிறுகதை - உயிர்மெய்யார் - 04.11.2025
சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இன்னும் ஓரிரு வருடங்களில் எழுபதைத் தொட இருக்கும் வயது. கைலியும் பனியனும் போட்டிருந்தார். நாலைந்து நாள் தாடி அவர் முகத்திற்கு கொஞ்சம் வசீகரத்தைத் தான் கூட்டியிருந்தது. மனைவி சந்திரா கொடுத்த காபியை உறிஞ்சியவாறே மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு முன்பக்கம் இருந்த காலி இடத்தில் உட்கார்ந்திருந்ததால் காற்று நன்கு அடித்துக் கொண்டிருந்தது. ‘படார்…’ முன் கேட்டிலிருந்து தான் அந்த சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தார். ஒரு

உயிர்மெய்யார்
6 min read


பணிவிடை - சிறுகதை - உயிர்மெய்யார் - 26.10.2025
ப ழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குப் போகும் பேருந்தில் ஏறினாள் மதுமதி. துணிமணிகள் வைத்திருக்கிற ஜிப் போட்ட பேக்கை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, சிறிய கைப்பையை இன்னொரு கையின் தோளில் மாட்டிக் கொண்டு ஏறுவது சற்றே கஷ்டமாக இருந்தாலும் ஏறிவிட்டாள். பேருந்தின் பின் சீட்டில் தான் இடம் கிடைத்தது. அவளுக்குப் பக்கத்தில் சற்றே வயதான அம்மா, தன் எதிரே பனியன் துணிகளை வைத்து இறுக்கிக் கட்டியிருந்த மூட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மதுமதிக்கு இடம் கொடுத

உயிர்மெய்யார்
10 min read


டெய்லர்
காலால் தடக் தடக்’கென்று மிதித்துக் கொண்டிருந்த தையல் மிஷின்கள் இரண்டை, போன வருடம் தான் விற்று விட்டு, மேற்கொண்டு கடன் வாங்கி, கரண்ட்டில் ஓடும் மிஷினை வாங்கியிருந்தார் அவர். அவசரம் அவசரமாக ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார். மெஷின் ஓடும் மெல்லிய ஒலி கேட்டது. இருக்கிற ஒரே டியூப் லைட்டின் ஒலியில் குனிந்து தைத்துக் கொண்டிருந்தார். எதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் சற்றே கோபமாக உட்கார்ந்திருந்தார். அவரது பார்வை டெய்லர் மேலேயே இருந்தது. அவரைச் சட்டை செய்யாமல் டைலர் சட்டையைத்

உயிர்மெய்யார்
12 min read


ராக்கெட் தாதா - எதிர் வெளியீடு
அட்டைப்படத்திலிருந்து துவங்குகிறேன். ஓர் ஆடையில்லாத இளம்பெண், தலைகுனிந்தபடி சோகமாக இருக்கிறாள். இவள் நிர்வாண உடலைச் சுற்றி பல ஊக்குகள்...

உயிர்மெய்யார்
10 min read
bottom of page