top of page
John Britto
Parisutham
Search



உயிர்மெய்யார்
7 days ago0 min read


கணேஷின் கதை
இப்ப நான் என்ன சொல்லிட்டேன்’னு அம்மாவும் அப்பாவும் இப்படி மூலையில ஒக்காந்துட்டு அழுவுறாங்க? டின்னர் டைம் இது....பசிக்குது. சாப்பாடு போடாம...சோபாவுல ஒக்காந்துட்டு அழறதுக்கு நான் சொன்னது தான் காரணமா? அட போங்க! இந்த Gen X, Gen Y பெரியவங்களயே புரிஞ்சிக்கமுடியலீங்க! அப்படி என்ன சொல்லிட்டேன்’னு தான முழிக்கிறீங்க. இன்னக்கி காலையிலேர்ந்து எங்க வீட்டுல என்ன நடந்தது’ன்னு சொன்னாதான் ஒங்களுக்குப் புரியும். மேல படிங்க. ****** Let me introduce myself…என் பேரு கணேஷ்…I’m in Year 7. அப்போ

உயிர்மெய்யார்
Jan 45 min read


யாரது?
உயிர்மெய்யார் 10.11.2025 மூச்சிறைக்க ஓடிவந்தான் ஏழெட்டு வயதுள்ள சிறுவன். தெருவில், ஆண் நாய்கள் சில ஒரு பெண் நாயைப் பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன. ஓர் ஆட்டோவில் சிவப்புக் கொடியைக் கட்டிக் கொண்டு சிலர் கோஷம் போட்டபடிச் சென்று கொண்டிருந்தனர். வானில் பறவைகள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கிட்டிப்புல் விளையாடிக்கொண்டிருந்த பையன்களிடம், “டேய்! பொணம்டா…பொணம்…இருபது கண்ணு பாலத்துல தேங்கி நிக்குது ஒரு பொணம்!” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு ஓடினான் அச்சிறுவன். விளையாட

உயிர்மெய்யார்
Nov 10, 20254 min read


செருப்பு - சிறுகதை - உயிர்மெய்யார் - 08.11.2025
“எங்கப் போட்டீங்க மச்சான்?” “அதோ!…அங்கப் போட்டேன்…மாப்ள” “ரெண்டையும் ஒண்ணாவா?...” “ஆமா!…ரெண்டையும் ஒண்ணாத்தான் போட்டன்….அப்படித்தான போடனும்?…” “அய்யய்யே!…அப்படிப் போடக்கூடாது மச்சான்….” “அப்பறம்?...” “இங்க ஒன்னு போடனும்….அப்பறம் ரொம்ப தூரம் தள்ளி…அதோ... அங்க இன்னொன்ன போடனும்…” “அப்படியா?...எதுக்கு மாப்ள?” “அப்பத்தான் காணாப்போகாது…ஒத்தச் செருப்பை வச்சிகிட்டு திருடன் என்னா பண்ணுவான்…..” என்று சொல்லிவிட்டு ‘கப கப’ன்னு சிரித்தான் பரதன். பரதனின் மனைவி வேணி, “இப்படித்தான் அண்ணா!…

உயிர்மெய்யார்
Nov 8, 20255 min read


பஞ்சவர்ணக்கிளி - சிறுகதை - உயிர்மெய்யார் - 04.11.2025
சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இன்னும் ஓரிரு வருடங்களில் எழுபதைத் தொட இருக்கும் வயது. கைலியும் பனியனும் போட்டிருந்தார். நாலைந்து நாள் தாடி அவர் முகத்திற்கு கொஞ்சம் வசீகரத்தைத் தான் கூட்டியிருந்தது. மனைவி சந்திரா கொடுத்த காபியை உறிஞ்சியவாறே மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்கு முன்பக்கம் இருந்த காலி இடத்தில் உட்கார்ந்திருந்ததால் காற்று நன்கு அடித்துக் கொண்டிருந்தது. ‘படார்…’ முன் கேட்டிலிருந்து தான் அந்த சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தார். ஒரு

உயிர்மெய்யார்
Nov 4, 20256 min read


பணிவிடை - சிறுகதை - உயிர்மெய்யார் - 26.10.2025
ப ழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குப் போகும் பேருந்தில் ஏறினாள் மதுமதி. துணிமணிகள் வைத்திருக்கிற ஜிப் போட்ட பேக்கை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, சிறிய கைப்பையை இன்னொரு கையின் தோளில் மாட்டிக் கொண்டு ஏறுவது சற்றே கஷ்டமாக இருந்தாலும் ஏறிவிட்டாள். பேருந்தின் பின் சீட்டில் தான் இடம் கிடைத்தது. அவளுக்குப் பக்கத்தில் சற்றே வயதான அம்மா, தன் எதிரே பனியன் துணிகளை வைத்து இறுக்கிக் கட்டியிருந்த மூட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மதுமதிக்கு இடம் கொடுத

உயிர்மெய்யார்
Oct 27, 202510 min read
bottom of page