கற்றல்
- உயிர்மெய்யார்
- Jun 5
- 1 min read
Updated: Jun 13

கற்றுக் கொடுக்கலாம்.
பறப்பதைப் பறவை.
பறப்பதோ குஞ்சு.
அதுவாக.
கற்றுக் கொடுக்கலாம்.
ஒடுவதை மாடு.
ஓடுவதோ கன்று.
அதுவாக.
கற்றுக் கொடுக்கலாம்.
பிடிப்பதைப் பூனை.
பிடிப்பதோ குட்டி.
அதுவாக.
கற்றுக் கொடுக்கலாம்.
பாடத்தை ஆசிரியர்.
கற்போதோ மாணவர்.
அவராக.
(01.06.2025)
மெல்பர்ன்.
Comments