மரத்தின் நிழல் என்னிடம்
- உயிர்மெய்யார்
- May 23
- 1 min read
Updated: Jun 13

மரத்தின் நிழல் யாருக்குச் சொந்தம்?
மலையாய் உயர்ந்த மரத்திற்கா?
நிலையாய் நிற்கும் நிலத்திற்கா?
மரத்தின் நிழல் யாருக்குச் சொந்தம்?
மரத்தை வளர்க்கும் மனிதருக்கா?
கூடுகள் கட்டும் குருவிக்கா?
மரத்தின் நிழல் யாருக்குச் சொந்தம்?
கூட்டிக் குறைக்கும் கதிருக்கா?
அமரும் சில வழிப் போக்கருக்கா?
மரத்தின் நிழல் யாருக்குச் சொந்தம்?
எனக்கேச் சொந்தம் கைக்கொட்டி
சொன்னது நிழல் தன் மார்தட்டி.
உன் நிழல் எனக்குத் தழலாக!
உயிர்ப்பாய் இருக்கும் உணர்வாக!!
உயிர்மெய்யார்
(23.05.2025)
Comments