top of page

மூங்கில் கூடும் மேலோகமும்

Updated: 3 days ago



நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர்

நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு

அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு

விஷப் பாம்பை அறையில் அவர் வளர்த்தாரு.

 

மூங்கில் கூடு செஞ்சி பாம்பை விட்டாரு. - அதில்

பால் பழங்கள் தினமும் அதற்கு இட்டாரு.

மற்ற சீடர் பயந்து பயந்து செத்தாரு. - அவர்

ஞானியிடம் சென்று பத்த வச்சாரு.

 

பாம்பை உடன் காட்டில் விடச் சொன்னாரு - மறுத்து

வீம்புடனே அன்பழகர் நின்னாரு.

மேலோகம் போகவழி என்றாரு - ஆனால்

அன்பழகர் தன்வழியே சென்றாரு.

 

ஞானியோட தூதுவராய் ஆனாரு - அதனால்

பத்து நாளு வெளியூரு போனாரு 

பாம்புக்கு பாலு வாங்கி வந்தாரு - அறைக்கு

ஓடிச் சென்று பழத்தோட தந்தாரு.

 

பசியோட கோபமான்னு எழுந்தாரு - பாம்பு

படக்குன்னு கொத்த கீழ விழுந்தாரு.

பெரியங்க பேச்சையே விட்டாரு - அதனால்

மேலாகம் சீக்கிரமா தொட்டாரு.


 ********

படிப்பினை: பெரியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை ஆழ்ந்து யோசித்து கடைப்பிடித்தல் நலம்.

எழுதியவர்: உயிர்மெய்யார்


Comentários


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page