top of page

வாழ்ந்திடுவோம் வாங்க

Updated: May 22


ree

அரண்மனைக்கு வாங்க

அரசரையேப் பாருங்க

அடுத்த ராஜா யாருன்னு

அவரு சொல்லு வாருங்க 


எழிலனுக்கு ஆசை

சம்பாரிச்சான் காசை

புத்தாடை வாங்கி

புறப்பட்டான் ஏங்கி

 

பிச்சைக்காரர் குளிருக்கு

தன்னாடை கொடுத்தான்.

வெகுண்ட மாட்டை அடக்கி

நல்ல பெயர் எடுத்தான்.

 

அரசர்  பிச்சைக்கார

வேடம் போட்ட தறிந்தான்

கருணை வீரம் நிறைந்து

மனதில் இடம் பிடித்தான்.

 

மானம் காத்த பருத்தியை

சிறந்த பூ என்றான்.

காட்சி காணும் ஒளியை

சிறந்த ஒளி என்றான்.

 

பகுத்து பார்க்கும் அறிவினை

சிறந்த ஆயுதம் என்றான்.

பார் போற்றும் மன்னனாய்

தேர்வு பெற்று நின்றான்.

 

எழிலனைப் போல் பரிவாய்

எழிலனைப் போல் துணிவாய்

எழிலனைப் போல் அறிவாய்

வாழ்ந்திடுவோம் வாங்க.

 

 *******

கருத்து: அறிவு, துணிவு, பரிவு, கடுமையான உழைப்பு, தலைமைத்துவம்

எழுதியவர்: உயிர்மெய்யார்


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page