நட்பு
- உயிர்மெய்யார்
- Jun 5
- 1 min read
Updated: Jun 13

என்நண்பன் ஒரு வீடு.
இளைப்பாறலாம். இயல்பாகலாம்.
என்நண்பன் ஒரு மரம்.
கருங்காற்று தந்து உயிர்க்காற்றுப் பெறலாம்.
என்நண்பன் ஒரு நிலம்
விதைகளைக் கொடுத்துப் பழங்கள் பெறலாம்.
என்நண்பன் ஒரு தீ
தணல் சேர்க்கலாம். அனல் கேட்கலாம்.
என்நண்பன் ஒரு படிக்கட்டு.
மேலேறலாம். மேலும் ஏறலாம்.
என்நண்பன் ஒரு வானம்.
ஒளி பெறலாம். மழை தரலாம்.
என்நண்பன் ஒரு கடல்.
பயணிக்கலாம். பயன் பெறலாம்.
என்நண்பன் என் நண்பன்
தேனாகலாம். நானாகலாம்.
(31.05.2025)
மெல்பர்ன்
Comments