வலியும் வழியும்
- உயிர்மெய்யார்
- Jun 5
- 1 min read
Updated: Jun 13

வலியா? வழியா?
அலை அடிப்பது கரைக்கு!
உலை கொதிப்பது அரிசிக்கு!
இடி இடிப்பது வானுக்கு!
மடி இடிப்பது மாட்டுக்கு!
வலியா? வழியா?
இதழ் விரிவது மலருக்கு
தணல் எரிவது விறகுக்கு
விதை பிரிவது மரத்திற்கு
சிதை எரிவது சவத்திற்கு
வலியே வழி.
(30.05.2025)
மெல்பர்ன்
Comments