குழந்தைகள்
- உயிர்மெய்யார்

- Jun 5
- 1 min read
Updated: Jun 13

சொந்தமாகுமா?
உமிழ்ந்த ஓவியம் தூரிகைக்கு
உலவிய சாமியும் தேரினுக்கு
எழுதிய பாடல் கோலுக்கு
இயம்பியத் தீர்ப்பு கோனுக்கு
சொந்தமாகுமா?
தெறித்த ஒளி விளக்குக்கு
உதித்தக் கதிர் கிழக்குக்கு
குதித்த மீன் குளத்திற்கு
முளைத்தப் பயிர் நிலத்திற்கு
சொந்தமாகுமா?
விடுத்த அம்பு வில்லுக்கு
தொடுத்தச் சொல் பல்லுக்கு
வடித்தச் சிலை கல்லுக்கு
வலித்தக் காயம் உடலுக்கு
சொந்தமாகுமா?
பழுத்த பழம் மரத்திற்கு
விடுத்த சொடுக்கு விரலுக்கு
விழுந்த மழை வானுக்கு
தணிந்தத் தாகம் நீருக்கு
சொந்தமாகுமா?
பெற்றப் பிள்ளைகள் எனக்கு
பெற்றப் பிள்ளைகள் உனக்கு
பெற்றப் பிள்ளைகள் நமக்கு
பெற்றப் பிள்ளைகள் நமக்கு
(29.05.2025)
மெல்பர்ன்



Comments