உறவு
- உயிர்மெய்யார்

- Jun 5
- 1 min read
Updated: Jun 13

இடைவெளி விட்டு சுழலுது சக்கரம்
இனிதே கிடைப்பது ஒரே பயணம்
இடைவெளி விட்டு இருப்பது கண்கள்
இரண்டும் தருவது ஒரே பார்வை
இடைவெளி விட்டு அமையுது துளைகள்
இவையோ வழங்குது ஒரே இசை
இடைவெளி விட்டு வளருது மரங்கள்
இலட்சியம் என்னவோ ஒரே வனம்
இடைவெளி விட்டு நிற்குது தூண்கள்
இடையில் இருப்பது ஒரே கூரை
இடைவெளி விட்டு வாழ்வது மனங்கள்
இயல்பாய் வளருது ஒரே உறவு
(24.05.2025)
மெல்பர்ன்



Comments