சக்தி பெறு - பாரம்பரிய விளையாட்டு 19
- உயிர்மெய்யார்

- Apr 25
- 1 min read
Updated: Jun 14
‘சாட், பூட், திரி’ என்று சொல்லி யார் முதலில் பிடிப்பது என்று முடிவு செய்யுங்கள். எப்படி சாட் பூட் திரி போடுவது? விளையாட்டில் பங்கு பெறும் எல்லோரும் வட்டத்தில் நில்லுங்கள். கைகளை உதறிக்கொண்டு சாட், பூட் சொல்லி, திரி என்றதும், இடது கையில் உங்கள் வலது கையை வையுங்கள். அது வானத்தைப் பார்த்தும் இருக்கலாம். பூமியைப் பார்த்தும் இருக்கலாம். குழுவில் மாறுபாடாக வலது கையை வைத்திருப்பவர், ஒதுங்கிக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, நால்வர் குழுவில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். மூன்று பேரின் வலது கை வானத்தைப் பார்த்து வைத்திருந்து, ஒருவரின் வலது கை பூமியைப் பார்த்து இருந்தால், பூமியைப் பார்த்து வைத்திருப்பவர் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மறுபடி அந்த மூவரும் ‘சாட், பூட், திரி’ போட்டு, ஒருவர் மிஞ்சும் வரை விளையாடவேண்டும்.
அந்த ஒருவர் விளையாட்டில் பிடிப்பவராக இருப்பார்.
எல்லோரும் ஓட, பிடிப்பவர் வந்து பிடிப்பார். பிடிக்க வரும் பொழுது ஓடிக்கொண்டிருப்பவர் உட்கார்ந்து விட்டால், அவரைப் பிடிக்க முடியாது. மற்றவர்களைப் பிடிக்க ஓடவேண்டும். அப்பொழுது ஓடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர், உட்கார்ந்திருப்பவர் தலையில் கை வைத்தால் ‘சக்தி’ வந்துவிடும். தமிழகத்தில் ‘கரண்ட்’ கிடைத்துவிட்டது என்பார்கள். சக்தி வந்தவுடன் அவர் எழுந்து ஓடலாம். சிலர் இதை Lock and Key விளையாட்டு என்றும் அழைப்பர். நீ எனக்கு உதவு. நான் உனக்கு உதவுகிறேன். உனக்கு ஒன்று என்றால் உனக்கு உதவ, சக்திக் கொடுக்க நான் இருக்கிறேன். எனக்கு ஒன்று வந்தால் எனக்கு உதவ நீ இருக்கிறாய் என்கிற ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கிற விளையாட்டு.



Comments