என் பயணம்
- உயிர்மெய்யார்
- 13 hours ago
- 1 min read

கதிரை அடித்து விட
மணியாய் நான் விழுந்தேன்.
பதராய்ச் சில உதிர
முத்தாய் நான் எழுந்தேன்.
நெல்லின் உமி போக
நிர்வாணமாகி நின்றேன்.
கல்லில் அரைத்து விட
மாவாய்த் திரண்டு வந்தேன்.
தீயில் வேக வைக்க
திணையாய் உருவானேன்.
வாயில் சுவை படவே
வாய்த்தது உனக்கானேன்.
உயிர்மெய்யார்
(23.05.2025)
Comments