Documentaries Tamil Video

​ஆணாய் இருந்து பெண்ணாய் மாறியவரின் துயரமும் வெற்றியும் கலந்த கதை

     துரைசாமி, தான் ஒரு பெண் என்றே உணர்ந்து வந்தார். ஒரு நாள் மும்பை சென்று, அறுவைசிகிச்சைப் பெற்று ரேவதியாய் மாறினார். அதற்குப் பின் துயரம் துரத்தியது. துக்கம் பெருகியது. பிச்சை எடுத்தார். பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார். ஆனால் ரேவதி ஒருநாள் புது மனுஷியாக புதுப்பிறப்பு எடுத்தார். தடைகளை தகற்றி எப்படி வெற்றியடைந்தார் என காண்பிக்கிறது இந்த ஆவணம்.

​புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முன்னோடி கோஸ்டோ ரிக்கா நாடு

     நிலத்தடியில் கிடைக்கும் எண்ணெயிலிருந்தும், நீரிலிருந்து கிடைக்கும் மின்சாரத்திலிருந்தும் எல்லா நாடுகளும் தங்களது 90% எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் போது, கோஸ்டோ ரிக்கா என்கிற குட்டி நாடு, சூரியனிலிருந்தும், காற்றிலிருந்தும் 90% எரிசக்தியை கொண்டுவருவது எப்படி? இக்காணொளி தெளிவாக விளக்குகிறது.

​உலகமயமாதலால் உண்டான தமிழர் வாழ்வியல் மாற்றங்கள் என்னென்ன?

     ஆங்கிலேயரின் வருகையும், அவர்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார நடவடிக்கைகளும் தமிழர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்தன என்று அழகுற விளக்குகிறது இந்தக் காணொளி. 1980 களின் பிறகு உலகமயமாக்கலால், இயற்கையை ஒட்டிய வாழ்க்கை இயந்திரமயமாய் ஆனதன் மர்மத்தை விளக்குகிறது. கேட்டு மகிழுங்கள்.

தமிழர்களின் பாரம்பரிய இயற்கை வாழ்வியல் காணாமல் போனதெப்படி?

     1930-40 களில் தமிழகத்தில் மின்சாரம் வந்தது. அதுவரை இருந்த தமிழரின் வாழ்வியல் பண்பாட்டில் மின்சாரம் வெகுவாக மாற்றத்தைக் கொண்டு வந்தது. பனைவிசிறியும் மண்பானையும் போன இடம் தெரியவில்லை. ஏற்றம் இறைத்து, கலப்பைவைத்து உழுது, மாட்டுச்சாணி உரம் போட்டு, குதிரில் இருந்த விதை கொண்டு செய்த விவசாயம் எங்கே போனது? இதற்குப் பின்னால் இருக்கிற அரசியல் என்ன?

​தமிழ் நடிகர் வடிவேலு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடம்

     மற்றவரது உடல் வடிவத்தை கிண்டல் செய்து நகைச்சுவை இருந்த காலத்தில், இரு பொருள் பட வசனம் பேசி நகைச்சுவை செய்த காலத்தில், ஆரோக்கியமான நகைச்சுவை செய்தவது எப்படி என வைகைப்புயல் வடிவேலு செய்து காட்டியதன் பின்னணி என்ன? சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்ததின் வாயிலாக என்ன சாதித்தார் இம்சை அரசன் வடிவேலு. அலசுகிறது இந்தக் காணொளி.

​தமிழ் மன்னர்கள் பாண்டியர்களின் வரலாறு சொல்லும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

     தமிழர்களது கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன. அங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரங்கால்கள் இல்லை. ஏன்? இக்கோயிலை ஒட்டி நடக்கும் கோலாகலமான திருவிழாக்களின் வரலாறு என்ன? சித்திரைத்திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், நவராத்திரி, ஆவணிமூலத் திருவிழா போன்றவைகள் எப்படிக் கொண்டாடப் படுகின்றன?

கங்காதரன் மேனன் தயாரித்த ஆவணப்படம் செய்த அமைதிப் புரட்சி

     கேரளாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர், ஆசிரியர், பயணக்கட்டுரை எழுத்தாளர், மேடை நாடக நடிகர் எனப் பல முகம் கொண்ட திரு. கங்காதரன் மேனன் அவர்கள் தயாரித்த, அமைதிப் பள்ளத்தாக்கு பற்றி தயாரித்த 'ஹல்லா போல்' என்ற ஆவணப்படம், இயற்கைக்கு எதிரான அரசின் திட்டத்தை மாற்றியதா? அவருடைய பயணம் எப்படி இருந்தது? என்ன ஆனது என்று விளக்குகிறது இந்தக் காணொளி.

பாண்டிய தேசத்திலிருந்து கயிலை மலைக்குச் சென்று வென்ற மதுரை மீனாட்சியின் கதை

     மக்களோடு மக்களாக வாழ்ந்த தெய்வம் மீனாட்சி. சிதம்பரம் ஆட்சியாக இல்லாமல், மீனாட்சி ஆட்சியாக வலம் வருவதற்கு காரணமாக இருந்த மீனாட்சி அம்மாளின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. மக்கள் மத்தியில் பேசப்படும் புராணக்கதை, மூன்று வயது சிறுமியாகப் பிறந்த அம்பிகையின் கதையாக மிளிர்கிறது. சூரனேஷனின் மகள் காஞ்சன மாலையாக அவதரித்த மீனாட்சியின் கதையைப் பார்த்து மகிழுங்கள்.

தஞ்சாவூர் தூய அந்தோணியார் பள்ளியின் 150 ஆண்டு கால வரலாறு

     1886ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தான் நான் படித்தேன். என் தந்தையார் மரியாதைக்குரிய பெரியவர் திரு. மாசிலாமணி பரிசுத்தம் அவர்களும் படித்தார். கிட்டத்தட்ட 150 வருடங்கள் பழமையான வரலாறில் முதல் உலகப்போரும் இரண்டாம் உலகப்போரும் கடந்து போயின. இன்னும் சுவையான நிகழ்வகளை விளக்கிச் செல்கிறது இக்காணொளி.

1360 ஏக்கர் மணல் திட்டில் தனி ஆளாக ஒரு அடர்ந்த காட்டை உருவாக்கியவரின் கதை

     ஜாதவ் மொலாய் பாயங், அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்காட் பகுதியில், பிரம்மபுத்திரா நதியருகே இருந்த 1360 ஏக்கர் மணல் திட்டில், பறவைகளும், மிருகங்களும் உலாவரும் பசுமைக் காட்டை உருவாக்கிய உன்னத கதை. அவர் பட்ட சிரமங்களும், ஏறிய சிகரங்களும் விளக்கப்படுகிறது இக்காணொளியில்.

​தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்களின் கதை

     நகைச்சுவையுடன் கூடிய கதையை, புதினமாக எழுதிய தமிழ்த்தாயின் தவப்புதல்வன், முன்சீப் என்கிற பதவியில் பணியாற்றினாலும், தமிழ்ச் சேவை செய்து புகழ்ப்பெற்றவர். திருச்சியில் பிறந்து இன்றைய மயிலாடுதுறையில் (அப்போதைய மாயூரத்தில்) பணியாற்றி, பிரதாப முதலியார் சரித்திரம் என்கிற நாவலை எழுதியவரின் கதை.

​கடம்பவனம் என்ற ஊர் மதிரை என்றாகி எப்படி மதுரை ஆனது?

     கடம்பவனம் நாட்டை ஆண்ட குலசேகரப்பாண்டியன் என்கிற மன்னன் எப்படி மதுரையோடு தொடர்பானான்? அந்த ஊரில் இருந்த தனஞ்செயன் என்கிற விவசாயி என்ன செய்தார்? கடம்ப மரத்திற்கு கீழே இருந்த சுயம்புலிங்கத்தை இந்திரன் வணங்கியதால் என்ன ஆனது? காணொளியில் காணுங்கள்.

​பறவைகளை கூர்ந்து நோக்கி புதிய பார்வை கொடுத்த சலீம் அலி அவர்களின் கதை

     எத்தனை விதமான பறவைகள் இருக்கின்றன? ஏன் அவைகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பறந்து செல்கின்றன? பெரிய சமுத்திரங்களை கடந்து பறக்கின்றன? பறவை ஆராய்ச்சியில், சலீம் மொய்சுதீன் அப்துல் அலி அவர்கள் செய்த சாதனைகள் என்னென்ன? 1876 நவம்பர் 18 என்ன நடந்தது?

​லெமூரியாக் கண்டம் என்ற ஒரு கண்டம் இருந்ததா?

     கன்னியாக்குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் 1907ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி பிறந்த தமிழறிஞர் கா. அப்பாத்துரையார் செய்த அரிய ஆராய்ச்சி என்ன? 5 மொழிகளில் புலமைப் பெற்ற பன்மொழிப் புலவர் கண்டுபிடித்த ஆராய்ச்சி முடிவுகள் தமிழரின் வரலாற்றைப் புரட்டிப் போட்டதா? காணொளியில் பாருங்கள்.

​நோக்கு வர்மக்கலை தமிழர் கலை என்பதற்கு என்ன சான்று?

     நோக்கு வர்மக்கலை குமரிக்கண்டத்திலிருந்து வந்ததா? சிவன் முருகனிடம் சொல்லி, அகத்தியர் வழியாக சித்தர்களிடம் வந்தடைந்த தமிழர் கலையா? போதி தர்மர் சீனா சென்று போதித்த கலை எது? தமிழர் வாழ்வில் அன்றாட பண்பாட்டில் இக்கலை எப்படி பொருந்தியுள்ளது? இக்காணொளி விளக்குகிறது.

​சாதாரண குழந்தை விளையாட்டில் தமிழர் அறிவியல்

     பருப்புக்கடை, பருப்புக்கடை என்கிற குழந்தை விளையாட்டை உங்கள் அம்மா விளையாடியிருப்பார்கள். அல்லது நீங்கள் உங்கள் குழந்தையோடு விளையாடியிருப்பீர்கள். அந்த விளையாட்டின் பின்னால் உடலியல், உளவியல் அறிவியல் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிந்திருக்கிறீர்களா? இதோ, இக்காணொளியைக் காணுங்கள்.

மற்றவரை உங்கள் வசம் வசியம் செய்ய எளிய பயிற்சிகள்

     தற்காப்பு கலை, மருத்துவக்கலை, போர்க்கலை ஆகியவைகளை ஒன்று சேர்த்து இருக்கும் நோக்கு வர்மக்கலையை எப்படி கற்பது? வசியம் செய்வது எப்படி? கண்களுக்கானப் பயிற்சி, முத்திரைகள் பயிற்சி, மூலிகைகள் பயிற்சி, ஓகப்பயிற்சி என்று பிரித்து இந்தப் பயிற்சிகளை எப்படிக் கற்பது என இந்தக் காணொளி விளக்குகிறது.

இத்தாலி என்பது ஒரு தமிழ்ச் சொல்லா? ஆச்சரியம்

     இட்டாலஸ் என்கிற கிரேக்கச்சொல் எந்த வேரிலிருந்து வந்தது? விட்டாலஸ் என்கிற லத்தின் சொல்லின் பொருள் என்ன? தமிழர் இத்தாலி நாட்டில் வாழ்ந்தனரா? விடைச் சொல்கிறது இக்காணொளி.

​தமிழர் பாரம்பரியக் கலையான நோக்குவர்மத்தின் மர்மங்கள்

     72,000 நாடிகளால் பின்னப்பட்டிருக்கிறது மனித உடல். அதன் ஊடே 10 விதமான வாயுக்கள் ஒடுகின்றன. அவை என்னென்ன வாயுக்கள்? அந்த நாடிகளின் முடிச்சுக்கள், ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களை எவ்வாறு குறிப்பிடுகிறோம்? வர்ம புள்ளி என்றால் என்ன? நோக்கு வர்மக்கலையை எவ்வாறு புரிந்துக் கொள்வது?

​பிரமிடு என்பது தமிழ்ச்சொல்லா? எகிப்தில் தமிழர் வாழ்ந்தனரா?

     தமிழ் மரபுப்படி, நீத்தாரை புதைக்கும் வழக்கம் எகிப்திலும் இருந்திருக்கிறது. இடுதல் என்றால் புதைத்தல். பிரமிடு என்கிற சொல் இப்படித்தான் வந்ததா? ஆச்சரியமாக இருக்கிறதே!!!

​நோக்கு வர்மம் மூலம் வசியம் செய்யும் முறைகள் என்னென்ன?

     வர்மபுள்ளிகளின் மேல் தீவிரமாக ஒருவர் பார்வையைச் செலுத்தும்போது என்ன நடக்கிறது? ஆக்கத்திற்கும் அழிவிற்கும் நோக்கு வர்மத்தை பயன்படுத்தலாமா? ஆயுத வரிசை, அடிமுறை என்றெல்லாம் சொல்லப்படுகிறதே அவைகள் என்ன? நோக்குவர்மத்தை எப்படி கற்றுக் கொள்வது? எங்கிருந்து வந்தது? யார் கொண்டுவந்தது?

​மர்மமான தமிழர் அடிமுறை வர்மக்கலை ரகசியங்கள்

     அடி தடு பிடி, ஆயுத முறை, வர்ம அடி ஆகியவை இணைந்த அடிமுறை என்கிற கலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்த அடிமுறை, வாசியோகா, வர்ம வைத்தியம் அகிய மூன்றும் இணைந்த வர்மக்கலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இது எப்படி சித்தர் அறிவியலில் ஒரு பகுதியாக இருக்கிறது?