top of page

5. பாண்டியன் கற்றுக் கொண்ட வெற்றிப் பாடம்

பாண்டியன் என்ற சிறுவன் ஒருவன் வேண்டியதெல்லாம் வெற்றி - மனம்
 தோண்டியேப் பார்த்தால் சத்தம் கேட்கும் எங்கும் வெற்றி வெற்றி 
 சீண்டிய தோல்வியை சீரழித் திடவே சிரித்தான் கவலை வற்றி - தடைத்
 தாண்டியே போக தினமும் கொண்டான் திலகம் இட்ட நெற்றி
 
 பாட்டியும் சொன்னாள் பாரினில் வெற்றி தனி ஒரு நபருக்கில்லை - பலர்
 கூட்டமாய் கொள்வது மட்டுமே வெற்றி மற்றது வெற்றி இல்லை
 நாட்டினில் தனி நபர் வெற்றி கொள்வது சகஜம் என்றான் பாண்டி - இல்லை
 ஏட்டினில் உள்ளதை மாற்றி அமைத்திடு நல்லது என்றாள் பாட்டி.
 
 ஊரினில் பொங்கல் திருவிழா வருது ஓட்டப் பந்தயம் இருக்க - நான்
 ஓடியே முதலில் சீறியே வருவேன் வெற்றிக் கனியை பறிக்க 
 என்றவன் பாண்டியன் கூடவே ஓடிட எட்டு பேர் நின்றனர் கோட்டில்
 வென்றவன் பாண்டியன் நின்றவர் மகிழ்ச்சியை எப்படிச்சொல்வது பாட்டில்?
 
 சிறப்பிது பாண்டியா என்றனர் ஊரார் கண்களில் நீரைத் தேக்கி - அவன்
 சிங்கத்தின் பார்வை கொண்டிட சிலிர்த்தான் இரண்டு கைகளைத் தூக்கி
 பாட்டியோ சின்ன புன்னகை கூட உதிர்க்கவில்லை ஏனோ? - அவன்
 போட்டியாய் ஓடி ஜெயிச்சது எல்லாம் போனதே, எல்லாம் வீணோ?
 
 முதியவர் இருவரை கோட்டினில் நிறுத்தி மூவரும் ஓடச் சொன்னார் - இது
 சதியென மற்றவர் நினைத்திட பாண்டியன் சட்டென கோட்டில் நின்றான்.
 ஒன்று இரண்டு மூன்று என்றதும் பாண்டியன் ஓடியே வென்றான். - ஆனால்
 நன்று இதுவல்ல என்று ஊரார் மௌனம் ஏனோ ஆனார்.
 
 கையைத் தட்டி மகிழ்ந்த கூட்டம் அமைதியாய் ஆனது ஏனோ? - என
 ஐயமும் வருத்தமும் கூடிட பாண்டியன் கலங்கியே நின்றுவிட்டானோ?
 வையமும் வாழ்த்திடும் சொல்வதைக் கேளென பாட்டியே தேற்றி னாளே - நீ
 மையமாய் நின்றுகொள் என்று சொல்லியே நல்லொளி ஏற்றினாளே!
 
 இருவரின் கைகளை இறுக்கிப் பிடித்தே இறுதிக் கோட் டைந்தான் - அந்தச்
 சிறுவனின் சிறப்பினை ஊரார் மெச்சி உச்சி முகர்ந்திட்டார்.
 ஒருவரின் வெற்றி வெற்றியல்ல என பாண்டியன் புரிந்துக் கொண்டான். - ஒரு
 குழுவினர் வெற்றியே வெற்றியென அவன் பாட்டி புரிய வைத்தாள்.

  ************
 படிப்பினை: வெற்றி, சாதனை, கூட்டு செயல்பாடு, கூட்டு வெற்றி, குழு செயல்பாடு, 
 பாடல் ஆசிரியர்: ஜான் பி. பரிசுத்தம் 
6 views0 comments

Recent Posts

See All

4. அரசர் ஓவியம்

குமரேசன் ஓவியரு குடிசையில வாழ்ந்தாரு அரும்பு என்ற மனைவியோடு வறுமையில வாழ்ந்தாரு அந்த நாட்டு அரசனுக்கு வந்ததொரு அரிய ஆசை அச்சு அசலா...

3. மூங்கில் கூடும் மேலோகமும்

நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர் நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு விஷப் பாம்பை அறையில் அவர்...

2. எதை எடுப்பது?

எதுசரி? எதுசரி? வாழ்க்கையில் முடிவை தினமும் எடுப்பது எப்படி? - சின்ன கேசரி கிண்ணம், முந்திரி பருப்பு சொல்லுது சொல்லுது இப்படி. - எங்க...

Comments


bottom of page