3. மூங்கில் கூடும் மேலோகமும்

 நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர்
 நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு
 அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு
 விஷப் பாம்பை அறையில் அவர் வளர்த்தாரு.
 
 மூங்கில் கூடு செஞ்சி பாம்பை விட்டாரு. - அதில்
 பால் பழங்கள் தினமும் அதற்கு இட்டாரு.
 மற்ற சீடர் பயந்து பயந்து செத்தாரு. - அவர்
 ஞானியிடம் சென்று பத்த வச்சாரு.
 
 பாம்பை உடன் காட்டில் விடச் சொன்னாரு - மறுத்து
 வீம்புடனே அன்பழகர் நின்னாரு.
 மேலோகம் போகவழி என்றாரு - ஆனால்
 அன்பழகர் தன்வழியே சென்றாரு.
 
 ஞானியோட தூதுவராய் ஆனாரு - அதனால்
 பத்து நாளு வெளியூரு போனாரு 
 பாம்புக்கு பாலு வாங்கி வந்தாரு - அறைக்கு
 ஓடிச் சென்று பழத்தோட தந்தாரு.
 
 பசியோட கோபமான்னு எழுந்தாரு - பாம்பு
 படக்குன்னு கொத்த கீழ விழுந்தாரு.
 பெரியங்க பேச்சையே விட்டாரு - அதனால்
 அவருடைய உசிரையே விட்டாரு.

 ********
 படிப்பினை: பெரியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை ஆழ்ந்து யோசித்து கடைப்பிடித்தல் நலம்.
 எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம் 
0 views0 comments

Recent Posts

See All

5. பாண்டியன் கற்றுக் கொண்ட வெற்றிப் பாடம்

பாண்டியன் என்ற சிறுவன் ஒருவன் வேண்டியதெல்லாம் வெற்றி - மனம் தோண்டியேப் பார்த்தால் சத்தம் கேட்கும் எங்கும் வெற்றி வெற்றி சீண்டிய தோல்வியை சீரழித் திடவே சிரித்தான் கவலை வற்றி - தடைத் தாண்டியே போக தி

4. அரசர் ஓவியம்

குமரேசன் ஓவியரு குடிசையில வாழ்ந்தாரு அரும்பு என்ற மனைவியோடு வறுமையில வாழ்ந்தாரு அந்த நாட்டு அரசனுக்கு வந்ததொரு அரிய ஆசை அச்சு அசலா வரையச் சொல்லி முறுக்குனாரு பெரிய மீசை அரண்மனையில் குமரேசன்

2. எதை எடுப்பது?

எதுசரி? எதுசரி? வாழ்க்கையில் முடிவை தினமும் எடுப்பது எப்படி? - சின்ன கேசரி கிண்ணம், முந்திரி பருப்பு சொல்லுது சொல்லுது இப்படி. - எங்க அம்மா எளிதா புரிய வச்சாங்க. முடிவை எடுப்பது அப்படி - நீ சும்மா